தமிழகத்தில் பொது ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதில் கொரோனா பாதிப்பு குறைவான 25 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
➤ 25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணி, அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு போக்குவரத்து அனுமதி
➤ இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது
➤ 25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம்.
➤ தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதி.
➤ 12 ஆம் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுமதி.
➤ சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம்.
அனைத்து மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது:
➤ வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு செய்ய தடை உத்தரவு தொடர்கிறது
➤ பள்ளிகள், கல்லூரிகள் இயங்க மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும்
➤ பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை
➤ வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் படிப்படியாக அழைத்து வர நடவடிக்கை
➤ வாடகை டாக்சிகளை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம்