19-05-2020, வைகாசி 06, செவ்வாய்க்கிழமை.
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30.
நாளைய ராசிப்பலன் – 19.05.2020
மேஷம்
குடும்பத்தில் இன்று உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெரியவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். உபயோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
கடகம்
உங்களுக்கு குடும்பத்தினரால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பின் காரணமாக வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நிலை மந்தமாக காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கன்னி
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேளையில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.
துலாம்
உங்களுக்கு பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். வருமானம் பெறுகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வேளையில் மேல் அதிகாரிகளுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
விருச்சிகம்
நீங்கள் செய்யும் செயல்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.தொழில் ரீதியான பிரச்சனைகள் குறையும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
மகரம்
உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலன்களை கொடுக்கும். உங்களின் முயற்சிக்கு உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
கும்பம்
பண வரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படலாம். வழக்கு விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
மீனம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் நட்பு அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும்.