தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்ததில் 73 பேர் மகாராஷ்ராவில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வரும் அளவிற்கு குணமடைந்து எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டு வருவது மக்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இன்றோடு ஊரடங்கு நிறைவடைவதால் தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.
10 நாட்களாக தினமும் 500 க்கும் அதிகமாகவர்கள் கொரோனவால் பாதிப்படைந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு 500 க்கும் கீழ் சென்றது. இது மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் 500க்கும் மேல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 73 பேர் அடங்குவர். இதனால் மொத்த பாதிப்பு 11,000 கடந்து, 11, 224 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றது. அதிகபட்சமாக சென்னையில் 482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அங்கு மட்டும் 6750 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 434 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 4,172ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78ஆக உள்ளது.