நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு விதித்த 3ஆம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய னிருக்கின்றது. 4ஆவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படும், அது வேறு மாதிரி இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் 4ஆவது பொதுமுடக்கம் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போல மகாராஷ்டிரா, தமிழகம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்தன. இந்தநிலையில் தான் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாக்க இருக்கும் நிலையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், கட்டுப்பாட்டு வழிமுறைகளை எல்லாம் வரும் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக கடைபிடியுங்கள் என்ற ஒரு உத்தரவு என்பது அனைத்து மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை அமைப்பினருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.
இதனால் ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை பிறப்பிக்கப்படுவது உறுதி என்று சொல்லப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.