ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பொதுப் போக்குவரத்தை துவங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இரு மாநில சம்மதத்துடன் இயக்கலாம் என்று வலியுறுத்தியுள்ளது. அனைத்து விதமான பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து அமலில் இருக்கும். விளையாட்டரங்கு, ஸ்டேடியம் திறந்து கொள்ள அனுமதி, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று ஊரடங்கு குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.