டாஸ்மாக் மதுக்கடையில் 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து மாலை 7 மணி வரை கடைகள் என்பது செயல்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதற்கான காரணம் ஏதும் சொல்லப்படவில்லை, இருந்தாலும் ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என்றும் அடிப்படையிலும், சமூக இடைவெளி என்பது தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் மேலாளர்களால் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 750 டோக்கன் வழங்க மேலாளர் உத்தரவிட்டுள்ளார். அதே போல புதுக்கோட்டை 500 டோக்கனுக்கு பதிலாக 650 டோக்கன் வழங்கி மது விற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.