சென்னை MGR நகர் சந்தையில் உள்ள வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக மாநிலம் முழுவதும் உள்ள பல மாவட்டத்தை சேர்ந்த 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பரவியது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது . இதே போல தற்போது எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கின்ற தகவல் தெரிய வந்திருக்கிறது.
எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அங்கு இருக்கக்கூடிய 150 வியாபாரிகள், அங்கு பணியில் விற்பனை பணியில் ஈடுபட்டு இருக்க கூடிய ஊழியர்கள், அவர்களோடு தொடர்புடைய ஊழியர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஈடுபட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையை தொடர்ந்து தற்போது MGR சந்தையிலும் கொரோனா பரவியுள்ளது தலைநகர் வாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.