Categories
மாநில செய்திகள்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

சென்னை எழிலக வளாகத்தில் மாநில பேரிடர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தற்போது மிக அதி தீவிர புயலாக மாறியது ஆம்பன் மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு கிழக்கே 650 கி.மீ. தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. அதேபோல, கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை மையத்தின் அறிவுறுத்தல் பேரில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனவே, வரும் 20ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |