டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 250 டோக்கன் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்கிலும் இன்று முதல் இரவு 7 மணி வரை மது விற்பனை செய்யலாம் என தமிழக அரசு மேலும் இரண்டு மணி நேரம் விற்பனை நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு அறிவிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 டோக்கனுக்கு பதிலாக 750 டோக்கன் வழங்கப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூடுதலாக 2 மணி நேரம் சேர்த்து இரவு 7 மணி வரை டாஸ்மாக் இயங்கும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 750 டோக்கன் வரை விநியோகம் செய்யலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 250 சேர்த்து 750 டோக்கன் வழங்கப்படுகின்றது.