Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சலூன் கடைகளை திறக்கலாம் – தமிழக முதல்வர் அறிவிப்பு ….!!

ஊரகப் பகுதிகளில் சலூன் கடை திறக்க அனுமதி திறக்க அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படியில் எடுக்கப்பட்டு வருகின்றது. நோய்யின் தாக்கம் குறைய, குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தம் நிலையங்கள் 19ஆம் தேதி முதல் இயங்க உத்தரவிடப்படுகிறது என்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமாக சில வழிமுறைகளை சலூன் கடைகள் பின்பற்ற வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில், கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முடிதிருத்துவோர் கையுறை அணிவதை உறுதி செய்ய வேண்டும். முன் கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று முதலமைச்சர்  அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார் கொண்டிருக்கிறது.

Categories

Tech |