தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்றுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயா ஆகிய 5 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
The Extremely Severe Cyclonic Storm ‘AMPHAN’ (pronounced as UM-PUN) intensified into Super Cyclonic Storm at 1130 IST of today, the 18th May, 2020.
— India Meteorological Department (@Indiametdept) May 18, 2020
ஆம்பல் புயலால் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள்ளனர். குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது ஆம்பன் புயலால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,தேனி, நாமக்கல்,கரூர், திருச்சி,தென்காசி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள அம்பான் புயல் காரணமாக நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் வழக்கத்தைவிட வேகமான காற்று வீசி வருகிறது. கடலோரக் கிராமங்களில் தென் மேற்கு திசையில் இருந்து வழக்கத்தைவிட வேகமான காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.