Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பரிசோதனைகள் குறைவாக செய்யப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்ததாவது, ” தமிழகத்தில் இன்று மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாரஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா பரிசோதனை குறைவாக மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல் தவறானது என கூறினார். மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 85,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரிசோதனை மையங்களில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 841 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் சராசரியாக 12,536 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது” என கூறியுள்ளார்.

Categories

Tech |