தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடைபெற வில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொரோனா நடவடிக்கையை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டு வருகிறது. அதற்கு உதாரணம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இறப்பு விகித குறைவும், தமிழகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் ஆகும். ஆனால் தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் மனசாற்றியின்றி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட முதல்வர் ஒரு கட்டத்தில் திமுக அறிக்கை விடுவதையும், கண்டனம் தெரிவிப்பதையுமே விமர்சித்தார்.
கடுப்பாக்கிய அறிக்கை:
அப்போது தமிழக முதல்வர் கூறுகையில், எதற்கெடுத்தாலும் இது சரியில்லை, அது சரியில்லை என சும்மா அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு. எங்களுக்கு மக்கள் உயிர்தான் முக்கியம், உங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை என்று சொல்லுமளவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டன அறிக்கை இருந்துள்ளது. அந்த வகையில் தான் தற்போது அறிக்கை விடுகின்றேன் என்று வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் முக.ஸ்டாலின்.
சங்கடப்பட்ட திமுக:
கடந்த 17ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனையை விமர்சித்திருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு ஆதரவாக நின்று, ஆளும் அரசின் குறைகளை சொல்வார் என்றால் முற்றிலும் பொய்யான தகவலை அரசியல் செய்வதற்காக பரப்புகின்றார் என்று நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரின் செய்தியாளர் சந்திப்பில் அம்பலமாகியுள்ளது. இது திமுகவுக்கு கசப்பான சங்கடத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
முக.ஸ்டாலின் அறிக்கை:
17-ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மே 7-ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 14102, இது படிப்படியாக குறைக்கப்பட்டு மே 6-இல் வெறும் 8270. பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைகளை குறைத்து நோய் தொற்று குறைகிறது அல்லது நோய் தொற்று இல்லை என போலியாக காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?
தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?
ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்! pic.twitter.com/Ri2QAILsNp
— M.K.Stalin (@mkstalin) May 17, 2020
கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்தது ஆளும் அதிமுக அரசு. பரிசோதனை செய்வதற்கான ஆர்டிபிசிஆர் உபகரணம் போதுமான அளவு இல்லையா? ரேப்பிட் டெஸ்ட்டுகள் இல்லையா? அல்லது கருவிகள் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கெடுபிடி செய்து கொண்டிருக்கிறீர்களா ? பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய் பரவல் இல்லை என்று சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது, ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்.
பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி வெளியிடுங்கள். அதன் மூலம் நோய் பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள். பொய்க்கணக்கு எழுதி பொழுதுபோக்காதீர்கள். அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றாதீர்கள்: வரலாற்றுப் பழியை வாங்கி சுமக்காதீர்கள் என்று ஆளும் அரசை கடுமையாக சாடினார். இப்படி திமுக தலைவர் முக.ஸ்டாலினின் கடுமையான விமர்சனங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
புள்ளி விவரங்களோடு அடுக்கிய விஜயபாஸ்கர்:
அமைச்சரின் பதிலடியை, எதிர்க்கட்சிகான பதில் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை தவறானது என்று எடுத்துக் கொள்ளவா ?குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாய்க்கு வந்ததை, சும்மா அரசியல் செய்வதற்காக அடித்து விடுகிறார் என்று சொல்லுமளவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாரங்களை புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு என் அடுக்கினார். இதன்மூலம் மு க ஸ்டாலின் வெளியிட்டும் அறிக்கைகள் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
ஸ்டாலின் சொன்னது பொய்:
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, கொரோனா சோதனையை குறைத்து செய்கின்றோம் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து முற்றிலும் தவறானது. எதிர்க்கட்சித் தலைவர் 16ஆம் 8,270 பரிசோதனை செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது பொய்யானது. அன்று தமிழகத்தில் 10, 585 டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என அதற்கான ஆதாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டினார். பின்னர் பேசிய அவர், டெஸ்ட் பொறுத்தவரை ஒரே நாளில் இவ்வளவு தான் என்று நிர்ணயிக்க முடியாது, அரசும் நிர்ணயிப்பது அல்ல. இன்று எத்தனை பேர் விமானத்தில் வந்தார்கள், ரயில் மூலமாக வந்தார்கள், பிற மாவட்டங்களிலிருந்து நுழைகிறார்கள் என்ற அளவினை பொறுத்து சோதனை செய்யப்படுகின்றது என்று பதிலளித்துள்ளார்.
குமுறும் திமுக:
ஒரு எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிக்கலாம், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சித்து கருத்து தெரிவிக்கலாம். ஆனால் அது ஒரு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். மக்களுக்கான கேள்வியாக இருக்க வேண்டும். தேவையில்லாமல், அரசியல் செய்வதற்காக எதையாவது ஒன்றை பேச வேண்டுமென்று பேசுவதாக இருக்கக்கூடாது. அமைச்சரின் பதிலடியால் முதலமைச்சர் தொடக்கத்தில் குறிப்பிட்டது உறுதியாகிவிட்டது. திமுக வேண்டுமென்றே அறிக்கை விடுகிறது என்று நிரூபணம் ஆகியுள்ளதால் திமுக தரப்பினர் சங்கடத்தில் இருக்கின்றன.