குறைவான பரிசோதனை என்று முக.ஸ்டாலின் கூறியது பொய் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாரத்தோடு அடுக்கினார்.
தமிழக்த்தில் கொரோனா பரிசோதனை செய்தது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அப்போது, தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று விமர்சித்திருந்தார். முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.
தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?
ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்! pic.twitter.com/Ri2QAILsNp
— M.K.Stalin (@mkstalin) May 17, 2020
முற்றிலும் தவறானது:
டெஸ்டிங் கை குறைத்து செய்கின்றோம் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து முற்றிலும் தவறானது. எதிர்க்கட்சித் தலைவர் 16ஆம் 8,270 பரிசோதனை செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது பொய்யானது. அன்று தமிழகத்தில் 10, 585 டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என அதற்கான ஆதாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டினார். பின்னர் பேசிய அவர், டெஸ்ட் பொறுத்தவரை ஒரே நாளில் இவ்வளவு தான் என்று நிர்ணயிக்க முடியாது, அரசும் நிர்ணயிப்பதுஅல்ல.இன்று எத்தனை பேர் விமானத்தில் இருந்து வந்தார்கள், எத்தை பேர் ரயில் மூலமாக வந்தார்கள் எத்தை பேர் பிற மாவட்டங்களிலிருந்து நுழைகிறார்கள் என்ற அளவினை பொறுத்து சோதனை செய்யப்படுகின்றது.
எல்லாரும் சோதனை செய்யுறோம்:
கொரோனாஉறுதி செய்யப்பட்டவருக்கு, அவருடைய வீட்டு தொடர்பு என எல்லாருக்குமே சோதனை செய்கின்றோம். தமிழ்நாடு முழுவதும் யாரெல்லாம் மூச்சுத் திணறலோடு இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும், ஒருவரையும் விடாமல் சோதனை செய்கின்றோம். சாதாரண இருமலோடு, மூச்சு மூச்சு திணறலோ வந்தாலோ சோதனை செய்கின்றோம். சாதாரண, லேசான இருமல் மாதிரி இருக்கு, காய்ச்சல் மாதிரி இருந்தாலும் அவர்களுக்கு சோதனை செய்கின்றோம்.
இந்தியாவிலே அதிகம் நாம் தான்:
ஒருவரும் விடுபடாமல் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி சோதனை செய்யப்படுகின்றது. சோதனையில் ICMR வழிகாட்டலை பின்பற்றுகின்றோம். இந்தியாவிலேயே அதிக சோதனை நாம் செய்துள்ளோம். இதுவரைக்கும் பார்த்தோமானால் 3,22,508 சோதனை செய்துள்ளோம். தமிழ்நாட்டில் அதிகபட்சமா சென்னையில் மட்டுமே 85 ஆயிரம் டெஸ்ட் எடுத்துள்ளோம். சென்னை சிட்டியில் மட்டும் 85, 000 டெஸ்ட் செய்துள்ளோம்.
ஏற்புடையதல்ல:
கடந்த 10 நாட்களாக ஒரு நாளைக்கு சாரிசாரியாக 12, 536 சோதனைசெய்துள்ளோம். ஒரு நாளைக்கு 14,000 ஒரு நாளைக்கு 13 ஆயிரம் , ஒருநாளைக்கு 12 ஆயிரம் இருக்கும் என 10 நாட்களுக்கான புள்ளி விவரத்தோடு அமைச்சர் பேசினார். ஒரு நாளைக்கு கூடுதலாக இருக்கிறது, ஒரு நாளைக்கு குறைவாக இருக்கிறது என்பதை வைத்து டெஸ்ட் குறைவாக செய்கின்றோம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. டெஸ்ட் குறைவாக செய்கின்றோம் என்ற கருத்து ஏற்புடையது அல்ல டெஸ்ட்டை குறைவாக எடுக்க கூடிய நிலை இல்லை.
அதிக ஆய்வகம்:
பிப்ரவரி மாதம் ஒன்னாம் தேதி முதல் நாம் சோதனை செய்கின்றோம். மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கக்கூடிய நேஷனல் வைராலஜி வைரஸ் ஆய்வகத்தில் டெஸ்ட் செய்தோம் இரண் டாவது தமிழ்நாட்டில் ஆய்வகம் வந்தது. கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் நாம் சோதனை செய்தோம். தற்போது 61 டெஸ்ட் ஆய்வகம் உள்ளது அரசு மருத்துவமனையில் 39, தனியார் மருத்துவமனையில் 22 ஆய்வகம் இருக்கின்றது. தனியார் மருத்துமனையில் யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம்.என்று அமைச்சர் விஜயபாஸ்கர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.