ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். இன்று கூடுதலாக பொறுப்பையும் ஏற்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும்.
இன்று ஆன்மிக ஈடுபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும். எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கவும் வேண்டும். காரியத்தடை, தாமதம் விலகிச் செல்லும். எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வீர்கள் இதனால் காரிய வெற்றியும் பெறுவீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். அதே போல கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும்.
சகோதர வகையில் ஒற்றுமையும் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர்நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர்நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீல மற்றும் சிவப்பு நிறம்.