விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மதியத்திற்கு மேல் மனக் கலக்கம் ஏற்படும் நாளாக இருக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். விலையுயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவியும் கிடைக்க கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்க்கு உதவி செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். இன்று சுய சிந்தனை மேலோங்கும் நாள் ஆகவும் இருக்கும்.
காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.