கும்ப ராசி அன்பர்களே …! இன்று திட்டம் வெற்றி பெறும் நாளாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் மாறும். தொழில் கூட்டாளிகளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள். ஆனந்தமான சூழல் விலகி ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று காரியத்தடை தாமதம் ஏதேனும் இருந்தால் கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டியிருக்கும்.
புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பப் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இன்று முரட்டு பிடிவாதம் மட்டும் தயவு செய்து வேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஓரளவு ஏற்பட்டு சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது மட்டும் ரொம்ப கவனம் வேண்டும். அதே போல தேவையில்லாத பிரச்சினைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம்.
காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். இனிமையாக பேசுங்கள் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.