நாளை புதுவையில் மதுக்கடைகளை திறக்காது என்றேனு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடியது. இதில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனால் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்தது.
இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அமைச்சரவை முடிவு அனுப்பப்பட்ட பொது மதுவுக்கான கலால் வரி நிலுவையில் உள்ளதால் ஆளுநர் ஒப்புதல் கிடைக்கவில்லை இதையடுத்து மதுக்கடைகளை நாளை இயங்காது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
மதுக்கடைகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்த முதல்வர், ஆளுநர் ஒப்புதல் கிடைத்த பின்பே மதுக்கடைகளை திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் நாளை புதுவையில் மதுக்கடைகள் திறக்கும் என்று எதிர்பார்த்த மதுபிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.