Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாநிலம் முடிவெடுத்தாச்சு…..! நாம என்ன பண்ணலாம் ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு தேர்வை  நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது நடத்த வேண்டாம், ஒரு மாதம் கழித்து இதற்கான முடிவு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறார் என்றால் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் என்ன சொல்கிறார் ஆலோசனை நடத்தி இதற்கென்று ஒரு அரசாணை வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொது தேர்வு தமிழகத்தில் மட்டும் நடத்தப்படுவதில்லை. ஜூன் மாதம் இறுதியில் இந்த தேர்வுகளை முடித்து விட வேண்டும் என்பதற்காக ஏனைய 20 மாநிலங்கள் இதற்கான முடிவை எடுத்திருப்பதாக பள்ளி கல்வி துறை தெரிவிக்கிறது. இந்த சூழலில் நடைபெறும் ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Categories

Tech |