Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூரை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!!

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்கின. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லுரிகளை தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றது.

இதையடுத்து, மருத்துவக்கல்லூரிகள் தொடங்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் படிப்படியாக நடைபெற்றது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் பல்வேறு அரசு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஓரளவு ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணமாக நேற்று முதல் அரசு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Categories

Tech |