11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து, அதற்கான புதிய அட்டவணையை வெளியிட்டார். அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதே போல மார்ச் 26ல் நடக்கவிருந்த 11ம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 16 இல் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 16ஆம் தேதி பிளஸ் 1 வேதியியல், புவியில், கணக்க்குபதிவியல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.