அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறிவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஆம்பன் புயல், நாளை மாலை வங்காள தேசத்தில் கரையை கடக்கும் எனவும், கொல்கத்தா நகருக்கு தென்கிழக்கே கடலில் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்த நிலையில் தற்போது தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன், அம்பன் புயல் மத்திய மேற்கு வங்க கடற்கரையிலிருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை மாலை கரையை கடக்கும் என்றும் தெரிவித்தார்.