சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. சென்னை முழுவதும் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இந்த நிலைமைதான். இப்போது சென்னை அம்மா உணவகத்திற்க்கென்ற ஒரு அறிவிப்பை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியீட்டு இருக்கின்றார். சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலம் முடியும் வரையும் ஆனால் இலவசமாக உணவு வழங்குவதற்கான உத்தரவானது அமைச்சர் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அம்மா உணவகங்களில் கட்டணம் வாங்குவது மக்களுக்கு மிகவும் மேலும் கஷடத்தை கொடுக்கும் என்பதால் ஊரடங்கு காலகட்டத்தில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்த சூழ்நிலை சென்னையில் இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமான சென்னை மாநகராட்சியில் தான் அதிகமான அளவில் 407 அம்மா உணவகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.