Categories
தேசிய செய்திகள்

பணக்கார முதலமைச்சர்….. 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த சொத்து….. சந்திரபாபு நாயுடு_க்கு 667 கோடி சொத்து…..!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.

Image result for சந்திரபாபு நாயுடு

இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள  வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, 73,203 , கார் மற்றும் அசையும் சொத்துக்களின் மதிப்பு  ரூ.47, 38, 067 , அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 19, 96, 95 ,474  என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவரின் மனைவி புவனேஸ்வரியின் சொத்தின் பாதிப்பு  ரூ.648 கோடி சொத்து இருப்பதாகவும் , அவற்றின் மொத்த மதிப்பு ரூ.667 கோடி என்று தெரிவித்துள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மனைவி உட்பட குடும்பத்தின்  சொத்து மதிப்பு 3 மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது.

 

Categories

Tech |