கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்.
* கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
* அறிகுறி உள்ள அனைவர்க்கும் கொரோனா பிசிஆர் முறையில் பரிசோதனை நடத்தவேண்டும்.
பரிசோதனைகள் தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள்:
* கொரோனா பரிசோதனை A,B,C,d என 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
* A வகை : பிற மாநிலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் பிரமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க அறிவுரை.
* B வகை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அறிகுறி இல்லாமல் நோய் தொற்று இருந்தால் அவர்கள் நோய் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும். அறிகுறி இருந்தும் பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என்றால், அவர்கள் முதல் 7 நாட்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்த பிறகே அவர்களை அனுப்ப வேண்டும்.
* C வகை: வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யவேண்டும். தொற்று இல்லையென்றாலும் அரசு உருவாகியுள்ள நோய் கட்டுப்பாட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் 7 நாட்களுக்கு கண்காணிப்பட்டு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும். மேலும் 2ம் பரிசோதனையில் நோய் தொற்று உறுதியானால் அவர்கள் கட்டுப்பாட்டு முகாம்களில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும்.
* D வகை: கர்ப்பிணி பெண்கள் மற்றும் 70 வயதை கடந்தவர்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். அதேபோல சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்த வேண்டும்.
* நோய் பாதிப்பு உள்ளவர்கள் மிக லேசான அறிகுறியுடன் இருந்தால் அவர்களை 10 நாட்களில் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும். அவ்வாறு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க வலியுறுத்தல்.