கொரோனா பாதிப்பில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ICMR பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு எது மாதிரியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என்று ICMR அதற்கான பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கின்றது. ICMRரின் சென்னை இயக்குநர் மனோஜ் முரோக்கர், துணை இயக்குனர் பிரதீப்கவுர் முதலமைச்சரை சந்தித்து கடிதம் கொடுத்து வாழ்த்தினர்.
தமிழகத்தின் எடுத்து வரக் கூடிய நடவடிக்கைகள் என்ன ? என்று கேட்ட்டறிந்துள்ளனர். அதற்க்கு தமிழக அரசும் இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது. தமிழக்த்தை பொறுத்த வரை சென்னையில் 7,125 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 750க்கும் மேற்பட்ட பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் இந்திய மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
அதேபோல அந்த மருந்துகள் மூலமாக பாதிப்புக்குள்ள பல பேர் குணமடைந்திருக்கிறார்கள். அந்த பகுதியை தனிக் கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கொரோனா பாதித்த மற்ற மாநிலங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள் எனபது தொடர்பாகவும் முதலமைச்சர் ICMR குழுவினருடன் கேட்டு பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரும் கலந்து கொண்டார்கள்.