Categories
அரசியல் மாநில செய்திகள்

ட்விட் போட்ட ஸ்டாலின்….! ”OK சொன்ன எடப்பாடி” மாஸ் காட்டும் திமுக …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மே 31 வரை ஊரடங்கு தொடரும் சூழலில் ஜூன் 1-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் பிடிவாதம் மாணவர்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது.இதில் அவரின் அலட்சியமும் அகங்காரமே தெரிகிறது. பொதுத் தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை, பதட்ட காலத்தில் அவசரம் வேண்டாம் என்று தான் வலியுறுத்துகிறார்கள்.

அரசாங்கமோ ஆன்லைன் வகுப்பு, இ-பாஸ் என பெற்றோரையும்,  மாணவர்களையும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது. மாணவரின் உயிருடன் விளையாடும் விபரீதமான போக்கை கைவிட்டு, பொதுத்தேர்வை தள்ளிவைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு உரிய கால அவகாசத்துடன் தேர்வை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும் ஜூன் 15ம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடியும் என்றும் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். மொத்தத்தில் திமுகவின் மாணவர்களுக்காக கோரிக்கையை அரசு செவிமடுத்து கேட்டு விட்டது.

Categories

Tech |