Categories
மாநில செய்திகள்

ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு – அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி!

10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் மற்றும் மாணவர்களில் வேறு ஊர்களில் இருப்பதன் காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து இன்று முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் 10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவித்தார். ஜூன் 1ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 12ம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |