Categories
திருவாரூர் மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்….. கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர்!

திருவாரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜி செய்யப்பட்டுள்ளதால் திருவாரூர் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. திருவாரூரில் இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மீதம் இருந்த இரண்டு நபர்களுக்கும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவர்கள் வழி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவாரூரில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. கோவை, தருமபுரி, ஈரோடு, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது.

Categories

Tech |