பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் பெண்கள் பங்கேற்பது இல்லை என்றெல்லாம் விவாதங்கள் கிளம்பின.
அதேவேளையில் பாரதப் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது ஏற்புடையதா ? என்று பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதற்கு ஒரு படி மேலே சென்ற பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா, கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று ட்விட் செய்துள்ளார்.
கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்
— H Raja (@HRajaBJP) May 19, 2020