Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 61 வயது முதியவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இன்று முதல் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயலபட புதுச்சேரி அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து மது விற்பனை செய்யலாம் என கூறப்பட்டு நிலையில் நேற்று மாலை இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. மத்திய அரசு தளர்வுகள் அளிக்க அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று முதல் புதுச்சேரியில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டுள்ளது.

Categories

Tech |