Categories
ஆன்மிகம் உலக செய்திகள் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(20.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

20-05-2020, வைகாசி 07, புதன்கிழமை.

இராகு காலம் மதியம் 12.00-1.30

எம கண்டம் காலை 07.30-09.00

குளிகன் பகல் 10.30 – 12.00.

இன்றைய ராசிப்பலன் – 20.05.2020

மேஷம்

உங்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் உண்டாகலாம். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். பணம் சம்பந்தமாக கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழிலில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

கடகம்

இன்று உங்கள் குடும்பத்தில் நற்செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளும் நற்பலனை கொடுக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்

என்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடலில் ஒரு சில உபாதைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூல பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது. எந்த வேலையிலும் கால தாமதம் ஏற்படலாம். குடும்பத்தாரின் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த கடன் வங்கிகளில் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். புதிய பொருள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் மந்தநிலை காணப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

உங்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். திருமண பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்

இல்லத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் அனுபவம் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படும். எந்த வேலையையும் புதுப் பொலிவுடனும் அன்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு பண வரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக சிலருக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம்.

Categories

Tech |