Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எல்லாம் யோக்கியமா ? ”அரண்டு போன திமுக” கதற விட்ட எச்.ராஜா ….!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

பிரதமர் மோடியை எப்படி இவ்வாறு பேசலாம் ? என்று அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியது. மக்களவை உறுப்பினர் என்று மதிக்காமல், பெண் என்று கூட பார்க்காமல் இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதா? என்று பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தார்.

திருமாவளவன்:

கரு. நாகராஜன் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் #ஜோதிமணியை டி.வி விவாதத்தில் பாஜக பொறுப்பாளர் அவமதித்ததை விசிக வன்மையாகக் #கண்டிக்கிறது. மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது #சனாதனத்தின் விளைச்சல் என்று பதிவிட்டார்.

கனிமொழி:

திமுக மக்களைவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன் என்று விமர்சித்திருந்தார்.

கரு.நாகராஜனுக்கு ஆதரவு:

ஒருபக்கம் பாஜகவின் கரு.நாகராஜனுக்கு எதிர்ப்பு எழுந்தாலும், பாஜகவினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு படி மேலே சென்ற பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்த அனைவருக்கும் ஆதாரத்தோடு சில விஷயங்களை குறிப்பிட்டு, நீங்களே, உங்கள் கட்சிக்காரர்களோ உத்தமர்களா ? என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

திருமாவளவனுக்கு பதிலடி:

எச்.ராஜா திருமாவளவனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து 2 ட்விட் செய்துள்ளார். ஒன்றில், பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி இடம் வந்து படுக்கிறார்கள. 10 மாதம் …, என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது.

அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். மற்றொரு ட்விட்டில், காயத்ரி ரகுராம் மீது திருமாவளவன் கடுமையாக பேசிய பத்திரிகை செய்தியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

கனிமொழிக்கு பதிலடி:

அதே போல கனிமொழி கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அப்போதைய திமுக தலைவர், கருணாநிதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த பத்திரிக்கைச் செய்தியை டேக் செய்து பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.  இதோடு விட்டுவிடாதே எச்.ராஜா, பிரதமர் மோடியை இனி எவர் விமர்சித்தாலும் திருப்பி அடிக்க வேண்டும் என்று பதிவிட்டு ஒரு டுவிட் செய்துள்ளார்.

திருப்பி அடியுங்க:

கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் ட்விட்டின் மூலமாக எதிர்கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர்.

Categories

Tech |