Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 38.73% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,350 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் மீட்பு விகிதமும் 38.73% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக என்றும் நேற்று மட்டும் 1.08 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 385 அரசு ஆய்வகங்களிலும், 158 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 134 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேரும், குஜராத்தில் 11,745 பேரும், தமிழகத்தில் 11,760 பேரும், டெல்லியில் 10,054 பேரும், ராஜஸ்தானில் 5,507 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,236 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,605 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 58,802 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களில் 2.9 சதவீதம் பேர் மட்டுமே தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஒரு லட்சத்திற்கு 4 பேர் கொரோனவால் உயிரிழக்கும் நிலையில், இந்தியாவில் 0.2 பேர் என்ற விகிதத்தில் உயிரிழப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |