Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்…சென்னையில் 3 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னையில் இன்று 3 வயதிற்குட்பட்ட 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் 6 மாத குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை பெரியமேட்டில் 8 மாத குழந்தைக்கும், அயனாவரம், திருவல்லிக்கேணியில் ஒரு வயது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர் இன்று கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் மேலும் 4 குழந்தைகளுக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |