நாடு முழுவதும் வழக்கமான பல் மருத்துவ பரிசோதனைக்கான தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் பல் மருத்துவமனைகள் இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சிவப்பு மண்டலத்தில் உள்ள மருத்துவர்கள் அவசர சிகிச்சை மட்டுமே அளிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளால் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிறபகுதிகளுக்கு செல்லலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும் வழக்கமான பல் மருத்துவ பரிசோதனைக்கான தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை. கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.