டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய ஐ.பிஎல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ 39 (35) ரன்களில் பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் கிளீன் போல்டனார். இதையடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 85 (53) , ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விஜய் சங்கர் அதிரடியை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் அணி ரன் வேகம் அதிகரித்தது. இறுதியாக ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது . விஜய் சங்கர் 40 (24) குவித்தார். கொல்கத்தா அணி சார்பில் ஆன்ட்ரெ ரஸ்ஷெஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.