Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத அளவு…! ”நடுங்க வைத்த கொரோனா” எகிறிய என்னிக்கை ..!!

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது மக்களை நடுங்கச் செய்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது.

மொத்த பாதிப்பு :

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத உச்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்த பாதிப்பு 1,06,475 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2078 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மொத்த பாதிப்பு 37,136ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதியானதால் அதன் எண்ணிக்கை 12,448ஆக எகிறியது.

குஜராத்தில் 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 12,141ஆக மாறியது. டெல்லியில் நேற்று மட்டும் 500 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 10,554ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 338 பேர் ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டதால் அங்கு மொத்த பாதிப்பு 5,845ஆக அதிகரித்துள்ளது.

 

குணமடைந்தோர் எண்ணிக்கை :

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 3,032 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அதன் மொத்த எண்ணிக்கை 42,309 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,639 பேரும், குஜராத்தில் 5043 பேரும், தமிழ்நாட்டில் 4895 பேரும், டெல்லியில் 4750 பேரும்,ராஜஸ்தானில் 3337 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இறப்பு :

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 146 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 3,302 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1325 பேரும், குஜராத்தில் 719 பேரும், மத்தியபிரதேசத்தில் 258 பேரும், மேற்குவங்கத்தில் 250 பேரும், டெல்லியில் 166 பேரும், ராஜஸ்தானில் 143 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 

கொரோனா பாதித்த 60,858 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26172 பேரும், தமிழ்நாட்டில் 7,468 பேரும், குஜராத்தில் 6379 பேரும், டெல்லியில் 5638 பேரும், மத்திய பிரதேஷ் மாநிலத்தில் 2,576 பேர் கொரோனா தொற்றால் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எகிறிய பாதிப்பு:

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் உயர்ந்து கொண்டே வந்தாலும் நேற்று ஒரு நாள் மட்டும் 6,148 உறுதி செய்யப்பட்டது இதுவரை பதிவாகாத அளவு ஆகும். கடந்த மே 17ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாளில் 5,049 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதே ஒருநாளில் அதிக பாதிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |