சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்படாத மக்களவை தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுமென்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது . அதிமுக கூட்டணி சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜகவின் ஹெச்.ராஜா வேட்பாளராக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.