Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கிறது ஆம்பன் புயல் – இந்திய வானிலை மையம்!

உச்ச உயர் தீவிர ஆம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் வடக்கு கடற்கரை, மேற்கு வங்கம் சுந்தரபேன் தீவுகளில் பலத்த காற்று வீடும் என கூறப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் போது மணிக்கு 155 – 166 கி.மீ வேகத்தில் காற்று வீடும். தற்போது 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் ஒடிசாவில் வடக்கு பகுதியில் 10 முதல் 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம், வங்கதேசத்தில் இருந்து 14 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் முதல் வங்கதேசம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னர் வளைகுடா மற்றும் தெற்கு வளைகுடா பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மன்னர் வளைகுடா மற்றும் தெற்கு வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |