Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்!

ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் 40 – 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். ஈரப்பதத்தை புயல் எடுத்து கொள்வதால் வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் அளித்துள்ளார். உச்ச உயர் தீவிர அம்பன் புயல் மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று நண்பகல் முதல் மாலை வரை கரையை கடக்கும் என தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |