Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் உட்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி!!

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில், சென்னை ராயபுரம் அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருவரும் பலியாகியுள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் பாதிப்புகள் 500-ஐ தாண்டியதாக தாவல் வெளியாகியுள்ளது. இதனால் சேனனியில் மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 8,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பதிகபவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |