செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 – ஐ தாண்டியது. எண்ணிக்கை மட்டும் 615 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 190 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 365 பேர் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. அதில் பலர் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து செங்கல்பட்டிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் 688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று சென்னையில் மட்டும் 552 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.