ராணா அரைசதம் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார்.
ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 ரன்களில் ஆட்டமிழக்க தனது பங்குக்கு டேவிட் வார்னர் 85 ரன் எடுத்து ஆட்டமிழக்க , விஜய் சங்கர் களமிறங்கி தனது பங்குக்கு 40 (24) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஆன்ட்ரெ ரஸ்ஷெஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் லின் , ரானா களமிறங்கினர். தொடக்கம் முதலே லின் 7 ரன்கள் அடித்த நிலையில் சாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா ராணாவுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி ரன் குவித்தனர்.ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ராபின் உத்தப்பா 27 பந்தில் 35 ரன் எடுத்த போது கவுல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறிய அடுத்த சில பந்தில் 3_ஆவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் சந்தீப் சர்மா பந்தில் 2 ரன் எடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராணா 50 ரன் குவித்து அசத்தினார் . கொல்கத்தா அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்துள்ளது . அந்த அணியின் ராணா (63)* ரசல் (3)* எடுத்து ஆடி வருகின்றனர் . ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி சார்பில் சாகிப் மற்றும் சந்தீப் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.