Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு – நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 2000 கணக்கானோருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது. மொத்த காய்கறி விற்பனை திருமழைசைக்கும் பூக்கடைகள் மாதரவரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க ஆயத்த பணிகளை சிஎம்டிஏ நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கடையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மூன்றடுக்கு உயர் ரக கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் கொண்டு கோயம்பேடு சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குப்பைகள் அணைந்தும் அகற்றப்பட்டு பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள்ள நோய் தடுப்பு பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |