Categories
உலக செய்திகள்

உலகளவில் 50 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.25 லட்சமாக உயர்வு!!

உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 50 லட்சத்து 599 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 70 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த 5 மாதமாக மக்களின் இயல்பு வழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. மேலும், கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனவால் அதிகம் பாதித்த நாடுகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

1. அமெரிக்கா: பாதிக்கபட்டவர்கள் – 1,570,583; உயிரிழப்பு – 93,533; குணமடைந்தவர்கள் – 361,180.

2. ரஷ்யா: பாதிக்கபட்டவர்கள் – 308,705; உயிரிழப்பு – 2,972; குணமடைந்தவர்கள் – 85,392.

3. ஸ்பெயின்: பாதிக்கபட்டவர்கள் – 278,803; உயிரிழப்பு – 27,778; குணமடைந்தவர்கள் – 196,958.

4. பிரேசில்: பாதிக்கபட்டவர்கள் – 271,885; உயிரிழப்பு – 17,983; குணமடைந்தவர்கள் – 106,794.

5. பிரிட்டன்: பாதிக்கபட்டவர்கள் – 248,818; உயிரிழப்பு – 35,341; குணமடைந்தவர்கள் – விவரங்கள் இல்லை.

6. இத்தாலி: பாதிக்கபட்டவர்கள் – 226,699; உயிரிழப்பு – 32,169; குணமடைந்தவர்கள் – 129,401.

7. பிரான்ஸ்: பாதிக்கபட்டவர்கள் – 180,809; உயிரிழப்பு – 28,022; குணமடைந்தவர்கள் – 62,563.

8. ஜெர்மனி: பாதிக்கபட்டவர்கள் – 177,827; உயிரிழப்பு – 8,193; குணமடைந்தவர்கள் – 156,900.

9. துருக்கி: பாதிக்கபட்டவர்கள் – 151,615; உயிரிழப்பு – 4,199; குணமடைந்தவர்கள் – 112,895.

10.ஈரான்: பாதிக்கபட்டவர்கள் – 124,603; உயிரிழப்பு – 7,119; குணமடைந்தவர்கள் – 97,173.

11. இந்தியா: பாதிக்கபட்டவர்கள் – 106,886; உயிரிழப்பு – 3,303; குணமடைந்தவர்கள் – 42,309.

Categories

Tech |