இந்திய பகுதியாக இருந்தாலும் நாங்க ஓயமாட்டோம் விலை கொடுத்ததாவது வாங்குவோம் என நேபாள நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவைக் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபானி,லிம்பியாதுரா, லிபுலேக் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலான லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலையை இந்தியா திறந்து 10 நாட்களுக்குப் பின்னரே நேபாள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நிகழ்விற்கு நேபாள வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
இந்த இரு நாடுகளும் 335 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கு உரிமை கொண்டாடி தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி அவர்களின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கியது தேசிய வரை படத்தை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் சர்மா அவர்கள் “ராஜ்ய தொடர்புடைய அந்தப் பகுதியை மீண்டும் திரும்பப் பெறும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. இந்த விவகாரத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை எவ்வளவு விலை கொடுத்தேனும் அப்பகுதியை மீட்டெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.