அகில இந்திய அடிப்படையில் ரூ .10,000 கோடி செலவினத்துடன் அமைப்புசாரா துறையான “நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்திற்கு (FME)” மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
“சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் 4 நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கியிருந்தார்.
அதில், ரூ. 10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் உள்ளூர் உணவு பொருட்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த ரூ.10,000 கோடி நிதி மூலம் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலமடையும் என தெரிவித்துள்ளார்.
ரூ.10,000 கோடியில் உருவாகும் இந்த நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தின் மரவள்ளி கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அதேபோல உத்தரபிரதேச மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது இதை திட்டத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.