ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் வார்டில் ஒரு செவிலியர் ‘உள்ளாடை’ அணிந்து அதற்கு மேல் தனது (PPE ) பாதுகாப்பு கவசம் மட்டுமே அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் மட்டும் உள்ள மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் தனது பணியின் போது அணிந்திருந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
https://twitter.com/newstula/status/1262780150359429120
அதாவது உள்ளாடைகள் மட்டும் அணிந்த நிலையில் அதன்மேல் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்(PPE) அணிதிருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த செவிலியரின் செயலுக்கு ஒருபக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து அவர் கூறியது,- கொரோனா வைரஸ் வார்டில் உள்ள ஆண் நோயாளிகளிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், அதே நேரத்தில் ‘சில சங்கடங்கள்’ இருப்பதாக ஒப்புக் கொண்டார். இந்நிலையில் சர்ச்சைகளுக்குள்ளான நர்ஸ் PPE யிற்கு உள்ளே தனது செவிலியர்களின் சீருடையை அணிந்துகொண்டு பணியாற்றுவது ‘மிகவும் சூடாக’ இருப்பதாகக் கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அவர் அணிந்திருந்த பிபிஇ மிகவும் வெளிப்படையானது என்பதை அவர் உணரவில்லை என்று துலா பிராந்திய மருத்துவ மருத்துவமனையில் தனது மேலாளர்களிடம் கூறினார்.