Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(21.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

21-05-2020, வைகாசி 08, வியாழக்கிழமை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.

நாளைய ராசிப்பலன் –  21.05.2020

மேஷம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்கள் பாராட்டப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் ஒரு சில மாறுதல்களை செய்வதனால் முன்னேற்றம் உண்டாகும். செலவுகளைக் குறைப்பதால் பணப்பிரச்சனை தீரும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்குப் பின்னரே நன்மை கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும். வியாபாரத்தில் நண்பர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் உள்ள பிரச்சினைகள் குறையும். வருமானம் இருமடங்காக கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய மாற்றங்களால் அனுகூல பலன் கிடைக்கும்.

சிம்மம்

உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் காணப்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் வருமானம் குறையும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். திருமணம் தொடர்பான புதிய முயற்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுகளை கொடுக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விருச்சிகம்

இன்று உங்கள் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் குறையும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

தனுசு

உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். சுப காரியங்களில் சில தடைகளுக்குப் பின் கைகூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர் பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை கொடுக்கும்.

மகரம்

இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கும்பம்

வீட்டில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் நிலை சீராகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.

மீனம்

பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

Categories

Tech |